அசோக் லேலண்ட் நிறுவனம் பிப்ரவரி 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரி 2020ல் மொத்தமாக 11475 வாகனங்களை விற்றுள்ளது, இது பிப்ரவரி 2019ல் 18245ஆக இருந்தது. பிப்ரவரி 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 37% குறைந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 10612 வாகனங்களை பிப்ரவரி 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு பிப்ரவரி 2019ல் விற்பனையான 17352ஐ விட 39% குறைவு.
பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் சென்ற ஆண்டை விட 17% குறைவாக 4107 இலகுரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது பிப்ரவரி 2019ல் 4954ஆக இருந்தது.
பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 7368 நடுத்தர மற்றும் கனரக வாகனங்களை விற்றுள்ளது. இது பிப்ரவரி 2019ல் 13291ஆக இருந்தது. சென்ற ஆண்டைவிட 45% குறைந்துள்ளது.
பேருந்துகள் விற்பனை பிப்ரவரி 2020ல் 41% அதிகரித்து 2474 ஆக இருந்தது. பிப்ரவரி 2019ல் பேருந்துகள் விற்பனை 1755ஆக இருந்தது.