டாடா மோட்டார்ஸ் பிப்ரவரி 2020ல் உள்நாட்டு சந்தை விற்பனை 38002ஆக இருந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிப்ரவரி 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரி 2020ல் மொத்தமாக 40634 வாகனங்களை விற்றுள்ளது, இது பிப்ரவரி 2019ல் 60151ஆக இருந்தது. பிப்ரவரி 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 32.4% குறைந்துள்ளது.

Tata Motors - Commercial - Passenger - Vehicles - Sales Volume - February 2020

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 38002 வாகனங்களை பிப்ரவரி 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 34% குறைவு. பிப்ரவரி 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 57221 ஆக இருந்தது.

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 25572 கனரக வாகனங்களை பிப்ரவரி 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 35% குறைவு. பிப்ரவரி 2019ல் உள்நாட்டு கனரக வாகன விற்பனை 39111 ஆக இருந்தது. கனரக வாகனங்களின் ஏற்றுமதி பிப்ரவரி 2020ல் 9% குறைந்து 2514ஆக இருந்தது. இது பிப்ரவரி 2019ல் 2771ஆக இருந்தது.

பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 12430 பயணிகள் வாகனங்களை (Cars) விற்றுள்ளது, இது பிப்ரவரி 2019ல் 18110ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஆண்டை விட 31% குறைந்துள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *