ஐஷர் நிறுவனம் வாகன விற்பனை பிப்ரவரி 2020ல் சென்ற ஆண்டை விட 28.7% குறைந்துள்ளது

ஐஷர் நிறுவனம் பிப்ரவரி 2020ற்கான கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரி 2020ல் மொத்தமாக 4586 வாகனங்களை விற்றுள்ளது, இது பிப்ரவரி 2019ல் 6428ஆக இருந்தது. பிப்ரவரி 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 28.7% குறைந்துள்ளது.

பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 4439 கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் விற்பனை செய்துள்ளது, இது பிப்ரவரி 2019ல் 6268ஆக இருந்தது. இது சென்ற ஆண்டை விட 29.2% குறைவாகும்.

பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 147 வோல்வோ கனரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது பிப்ரவரி 2019ல் 160ஆக இருந்தது. இது சென்ற ஆண்டை விட 8.1% குறைந்துள்ளது.

Eicher Trucks Buses - Sales Volume - February 2020

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 3875 வாகனங்களை பிப்ரவரி 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 27.4% குறைந்துள்ளது. பிப்ரவரி 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 5337 ஆக இருந்தது.

பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 564 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது பிப்ரவரி 2019ல் 931ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 39.4% குறைந்துள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *