மாருதி சுசூகி நிறுவனம் பிப்ரவரி 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரி 2020ல் மொத்தமாக 147,110 வாகனங்களை விற்றுள்ளது, இது பிப்ரவரி 2019ல் 148,682ஆக இருந்தது. பிப்ரவரி 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 1.1.% குறைந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 136,849 வாகனங்களை பிப்ரவரி 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 1.6% குறைந்துள்ளது. பிப்ரவரி 2019ல் வாகன விற்பனை 139,100 ஆக இருந்தது.
பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 10,261 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது பிப்ரவரி 2019ல் 9,582ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 7.1% அதிகரித்துள்ளது.