வட்டி + வரிச் சலுகைகள் + பாதுகாப்பு
- 8.6% வட்டி
- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும்
- கணக்கை மேலும் மூன்று ஆண்டிற்கு நீட்டிக்கலாம்.
குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 1,000/-
அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 15,00,000/-
முதிர்வு காலம்
- 5 ஆண்டுகள்
- ஓராண்டிற்கு பிறகு கணக்கினை முடிக்கும்பொழுது, 1.5 சதவீதமும், 2 ஆண்டிற்கு பிறகு முடிக்கப்படும் கணக்கிற்கு ஒரு சதவீதமும் முதலீட்டுத் தொகையில் பிடித்தம் செய்து வழங்கப்படும்.
சிறுசேமிப்பு திட்டங்களில் இந்த முதலீட்டுத் திட்டத்தில் தான் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.
அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம். பாரத ஸ்டேட் வங்கி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் குறிப்பிட்ட தனியார் வணிக வங்கி கிளைகளிலும் கணக்கு துவக்கலாம்.