பரஸ்பரநிதி திட்டம் ஒரு கூட்டுமுதலீட்டு திட்டம். பரஸ்பர நிதி திட்டம்மூலம் முதலீட்டாளர்கள் ஒரு சிறு தொகையைசெலுத்தி பரஸ்பர நிதி யூனிட்டுகளை வாங்கலாம். இவ்வாறு பல சிறுமுதலீட்டாளர்கள் சேர்ந்து முதலீடு செய்வதால் ஒருபெரும் தொகை கிடைக்கும். அத்தொகையை வைத்து பங்குகளை வாங்குவர். சிறு முதலீட்டாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம்.
பரஸ்பர நிதி திட்டங்கள் ஒரு இலக்கு மற்றும் குறிக்கோளுடன் செயல்படுகிறது. ஒவ்வொரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும்ஒன்று அல்லது சிலர் நிதி மேலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். எந்த பரஸ்பர நிதி திட்டம் முதலீட்டாளர்களின் குறிக்கோளிற்கு ஏற்ற மாதிரி இருக்கிறதோ, அந்த திட்டத்தில் யூனிட்டுகள் வாங்கலாம்.
பரஸ்பர நிதி திட்டங்கள் பல வகைப்படும். அவை முதலீடு செய்யும் பத்திரங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும். பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீடு செய்யும் பாத்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- கம்பெனி பங்குகள்
- கம்பெனி மற்றும் இதர நிறுவனங்கள் அல்லதுஅரசாங்க கடன் பத்திரங்கள்
- தங்கம்
பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக நடுத்தர கால மற்றும் நீண்ட கால முறையில் வருமானம் பெற முடியும்.
பரஸ்பர நிதி திட்ட மேலாளர்
இவர்கள், பரஸ்பர நிதி திட்டத்தில் சேர்ந்த தொகையை முதலீடு செய்வார்கள். பரஸ்பர நிதி திட்டத்தின் குறிக்கோளிற்கு ஏற்ற மாதிரி பங்குகளைஅல்லது கடன் பத்திரங்களை ஆய்வுசெய்து முதலீடு செய்வார்கள். இதுவே இவர்களின் முழுநேர வேலை. முதலீட்டாளர்கள் குறைந்த நேரம் செலவு செய்து அல்லது நிதி ஆலோசகரின் ஆலோசனைக்கேற்ற மாதிரி பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, முதலீடு செய்வதற்கு முன் திட்டம் சார்ந்த ஆவணங்களை கவனமாக படிக்கவும் அல்லது தேர்ந்த நிதி ஆலோசகரின் ஆலோசனைக்கேற்ப முதலீடு செய்யலாம்.