20.7 பில்லியன் டாலர் மதிப்புவாய்ந்த மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா அண்ட் மஹிந்தரா லிமிடெட் நிறுவனம், 2015-ல் அறிமுகமான தங்கள் தயாரிப்பான ஜீத்தோ மினி டிரக் பிளாட்பார்மின் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வர்த்தக தேவைகளுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும் ஜீத்தோ மினி டிரக்குகள் சரக்குகளைக் கையாள மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
தெலங்கானாவில் உள்ள சாகீராபாத்தில் அமைந்திருக்கும் மஹிந்திரா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஜீத்தோ டிரக்குகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 8 வகைகளில் விற்கப்படுகின்றன. உயர்ந்த செயல்திறன், நீடித்த பாதுகாப்பு, குறைந்த பராமரிப்பு செலவு, 30 சதவீதம் கூடுதல் மைலேஜ் ஆகியவற்றைக் கொண்ட ஜீத்தோ டிரக்குகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் லாபகரமாக உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சாதனையைப் பற்றி பேசிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமேடிவ் பிரிவின் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவு தலைவரான வீஜே ராம் நக்ரா (Veejay Ram Nakra, Chief of Sales & Marketing, Automotive Division, Mahindra & Mahindra Ltd), “இது எங்களுக்கு பெருமையளிக்கும் தருணமாகும். சிறப்பான செயல்பாடு மூலம் சரக்குகளை கையாள்வதில் ஜீத்தோ டிரக்குகள் அனைத்து பிரிவுகளிலும் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 30 சதவீதம் கூடுதல் மைலேஜ் கொண்ட இந்த டிரக்குகள், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளித்து, அவர்கள் மேலும் பணம் ஈட்ட உதவியாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜீத்தோ வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தரமான பொருட்களைத் தயாரிக்கும் மஹிந்திராவின் செயல்பாட்டுக்கு இது ஒரு நல்ல சான்றாக உள்ளது” என்றார்.
ஜீத்தோவைப் பற்றி
2015-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜீத்தோ, 1 டன்னுக்கும் குறைவான அளவு சரக்குகளை கையாள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது டிரக் ஆகும். டீசலில் இயங்கும் வகையான ஜீத்தோ டிரக்குகள் எஸ், எல், மற்றும் எக்ஸ் சீரிஸ் வகைகல் 3 சக்கர வாகனங்கள், மினி டிரக் மற்றும் மைக்ரோ டிரக்குகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிஎன்ஜியால் இயக்கப்படும் ஜீத்தோ டிரக்குகளும் விற்பனைக்கு உள்ளன.
1 லிட்டர் பெட்ரோலுக்கு 33.4 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வகையில் ஜீத்தோ டிரக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற டிரக்குகளிலேயே குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தும் டிரக்குகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. ஈ காமர்ஸ் வர்த்தகம், ஸ்வாச் பாரத் மிஷன் போன்ற பிரிவுகளிலும் இது மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யும் ஜீத்தோவுக்கு ஆண்டின் சிறந்த வாகனத்துக்கான அப்போலோ சிவி விருது கிடைத்துள்ளது. ‘மேக் இன் தெலங்கானா’ வீடியோவில் இடம்பெற்றுள்ள ஜீத்தோவுக்கு இ-காமர்ஸ் பிரிவில் மிகச்சிறந்த வரவேற்பு உள்ளது.
ஜீத்தோ வாகன வகைகளில் ஒன்றான, பொதுமக்களை ஏற்றிச்செல்லும் ஜீத்தோ மினிவேன் 2 பிரிவுகளில் 5 வகைகளில் விற்கப்படுகின்றன. உடல் அமைப்பைப் பொறுத்தவரை ஹார்ட் டாப் மற்றும் செமி ஹார்ட்டாப் வையிலும், எரிபொருள் வகையில் டீசல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகையிலும் இவை கிடைக்கின்றன. ஸ்டைலிஷான சக்திவாய்ந்த ஜீத்தோ மினிவேன் 11.9kW (16 HP) சக்தியுடனும், mDura இஞ்ஜினுடனும் குறைந்த அலவுஇ புகையை வெளியேற்றி மிகச்சிறந்த தரத்துடன் சேவையாற்றி வருகிறது.