பி டீ சி இந்தியா நிதி சேவைகள் நிறுவனம் முதல் காலாண்டில் ரூபாய் 55.93 கோடி லாபம் ஈட்டியுள்ளது

பி டீ சி இந்தியா நிதி சேவைகள் நிறுவனம் ஜூன் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 325.19 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 300.12 கோடிகயாக இருந்தது.

PTC India Financial Services Limited Logoஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பின் நிகர லாபம் ரூபாய் 55.93 கோடி என அறிவித்துள்ளது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 72.40 கோடியாக இருந்தது.

ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூ. 0.87 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 1.13 ஆக இருந்தது.

ஜூன் 30, 2018 அன்று நிறுவனத்தின் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூபாய் 642.28 கோடிகயாக இருந்தது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *