ஏடிடி ஷாப் ப்ரோமோஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் புது பங்குகளை முதன்மை பங்குச்சந்தை வழியாக வெளியிடுகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு தற்போது முதலீட்டாளர்கள் விண்ணப்பம் செய்வதற்காக ஆகஸ்ட் 21, 2018 அன்று துவங்கியது.
23,96,000 பங்குகளை ரூபாய் 26 என்ற மதிப்பில் (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு, ப்ரீமியம் ரூ. 16 ஒரு பங்குக்கு) இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக 4000 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பங்கு வெளியீட்டின் முன்னணி மேலாளராக பெடெக்ஸ் செக்யுரிட்டிஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு பதிவாளராக கேமியோ பெருநிறுவன சேவைகள் நிறுவனம் பணிபுரிகிறது.
இந்த பங்கு விற்பனை ஆகஸ்ட் 30, 2018ல் முடிவடைகிறது.