இன்றைய (வியாழக்கிழமை – ஆகஸ்ட் 30, 2018) வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு யூரோ, அமெரிக்க டாலர், மற்றும் பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. இந்திய ரூபாய் இந்த மூன்று நாணயங்களுக்கு எதிராக இன்று சரிந்தது.
நாணயம் | இந்திய ரூபாய் |
அமெரிக்க டாலர் | ₹ 70.7329 |
பிரிட்டிஷ் பவுண்ட் | ₹ 92.1518 |
யூரோ | ₹ 82.7184 |
ஒரு அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து 70.7329 ஆக இருந்தது. இது புதன்கிழமை வர்த்தகத்தில் 70.5046 ஆக இருந்தது. இது டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். ஆனால், அனைத்து வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களும் இறங்குமுகமாகவே இருக்கிறது.
ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 92.1518 ஆக இருந்தது. இது புதன்கிழமை வர்த்தகத்தில் 90.6257 ஆக இருந்தது.
ஒரு யூரோவிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து 82.7184 ஆக இருந்தது. இது புதன்கிழமை வர்த்தகத்தில் 82.3376 ஆக இருந்தது.