முன்னணி விமான சேவை நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் ஜூன் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 6066.91 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 5953.92 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பின் நஷ்டம் ரூபாய் 1323 கோடி என அறிவித்துள்ளது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 53.50 கோடி லாபமாக இருந்தது.
ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) (ரூ. 116.46) ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 4.71 ஆக இருந்தது.
ஜூன் 30, 2018 அன்று நிறுவனத்தின் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூபாய் 113.60 கோடியாக இருந்தது.