சென்ற வார வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 86.35 புள்ளிகள் உயர்ந்தது

பங்குச்சந்தையில் சென்ற வாரம் வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. சென்ற வார வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 303.92 புள்ளிகள் உயர்ந்து 38251.80ல் முடிந்தது. சென்செக்ஸ் குறியீடு ஆகஸ்ட் 17, 2018 அன்று 37947.88 என்ற அளவில் முடிந்தது. சென்ற வாரத்தில் சென்செக்ஸ் குறியீடு 38,487.63 என்ற உச்ச அளவை ஆகஸ்ட் 23, 2018 அன்று தொட்டது, குறைவான அளவாக 38050.69ஐ ஆகஸ்ட் 20, 2018ன் வர்த்தகத்தில் தொட்டது.

தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 86.35 புள்ளிகள் உயர்ந்து ஆகஸ்ட் 24, 2018 அன்று 11557.10 என்ற அளவில் முடிந்தது. சென்ற வார வர்த்தகத்தில் நிபிட்டி குறியீடு 11499.65 என்ற குறைவான அளவை ஆகஸ்ட் 20, 2018 அன்றும், 11620.70 என்ற உச்ச அளவை ஆகஸ்ட் 23, 2018 அன்றும் தொட்டது.

தேதி துவக்கம் உச்சம் குறைந்த அளவு மூடும்பொழுது பங்குச்சந்தை குறியீடு
20/08/18 11502.10 11565.30 11499.65 11551.75 நிப்டி
21/08/18 11576.20 11581.75 11539.60 11570.90 நிப்டி
23/08/18 11620.70 11620.70 11546.70 11582.75 நிப்டி
24/08/18 11566.60 11604.60 11532.00 11557.10 நிப்டி

சென்ற வாரத்தில் லார்சென் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் பங்குகள் நன்றாக உயர்ந்தது. நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் ஆகஸ்ட் 17, 2018 அன்று ரூபாய் 1240.15 என்ற அளவில் முடிந்தது. இந்த வார வர்த்தகத்தில் ரூபாய் 102.75 உயர்ந்து ரூபாய் 1342.90 என்ற அளவில் ஆகஸ்ட் 24, 2018 அன்று முடிந்தது. இந்நிறுவனம் பங்குகளை ரூபாய் 1500 வரை கொடுத்து திரும்ப வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுவே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

சென்ற வார வர்த்தகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பங்குகள் ரூபாய் 11.7 உயர்ந்து ரூபாய் 174.75 என்ற அளவில் முடிந்தது. இது ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 163.05ல் இருந்து 7.2% அதிகமாகும். இந்திய அரசு இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓ என் ஜி சி விதேஷின் பங்குகளை விற்று பங்குதாரர்களுக்கு ஈட்டுத்தொகை தருமாறு அறிவுறுத்தியுள்ளது. இதுவே இந்நிறுவனத்தின் பங்குகள் உயர காரணமாகும்.

சென்ற வார வர்த்தகத்தில் விலை உயர்ந்த மற்ற பங்குகளின் விவரம்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் – ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 1203.75ல் இருந்து ரூபாய் 1277.50ஆக 6.1% உயர்ந்தது.

ஆரோபிந்தோ பார்மா நிறுவனம் – ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 655.90ல் இருந்து ரூபாய் 693.50ஆக 5.7% உயர்ந்தது.

டாடா பவர் – ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 68.65ல் இருந்து ரூபாய் 71.75ஆக 4.5% உயர்ந்தது.

டெக் மஹிந்திரா – ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 687.70ல் இருந்து ரூபாய் 718.55ஆக 4.5% உயர்ந்தது.

விப்ரோ – ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 280.05ல் இருந்து ரூபாய் 292.15ஆக 4.3% உயர்ந்தது.

தேசிய அனல்மின் நிறுவனம் – ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 158ல் இருந்து ரூபாய் 164.30ஆக 4% உயர்ந்தது.

தேதி துவக்கம் உச்சம் குறைந்த அளவு மூடும்பொழுது பங்குச்சந்தை குறியீடு
20/08/18 38,075.07 38,340.69 38,050.69 38,278.75 சென்செக்ஸ்
21/08/18 38,360.32 38,402.96 38,213.87 38,285.75 சென்செக்ஸ்
23/08/18 38,416.65 38,487.63 38,227.36 38,336.76 சென்செக்ஸ்
24/08/18 38,366.79 38,429.50 38,172.77 38,251.80 சென்செக்ஸ்

சென்ற வார வர்த்தகத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்தது. சந்தையில் ஆகஸ்ட் 17, 2018 அன்று ரூபாய் 377.60ல் முடிந்த பங்கின் விலை ஆகஸ்ட் 24, 2018 அன்று ரூபாய் 356.95 என்று முடிந்தது. இது சென்ற வார விலையை விட 5.5% குறைவாகும்.

எஸ் வங்கியின் பங்குகள் ஆகஸ்ட் 24, 2018 அன்று ரூபாய் 374.20 என்ற அளவில் முடிந்தது. இந்நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 17, 2018 விலையான ரூபாய் 393.20ல் இருந்து 4.8% குறைவாக முடிந்தது.

மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் பங்குகள் 3.6% குறைந்து ரூபாய் 1378.30ல் முடிந்தது. இதன் விலை ஆகஸ்ட் 17, 2018 அன்று 1430.35 ஆக இருந்தது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்குகள் சென்ற வார வர்த்தகத்தில் 3.3% குறைந்து ரூபாய் 154.25ல் முடிந்தது. இந்நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 17, 2018 அன்று ரூபாய் 159.55 ஆக இருந்தது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *