பங்குச்சந்தை இன்று காலை மந்தமாக துவங்கியது. துவங்கும்பொழுது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 38366.79 புள்ளிகளில் துவங்கியது. இது மேலும் உயர்ந்து 38429.50 வரை சென்றது. ஆனால், முதலீட்டாளர்கள் லாபம் பதிவு செய்ததால் கீழே இறங்கியது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84.96 புள்ளிகள் குறைந்து 38251.80 புள்ளிகளில் முடிந்தது.
தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 25.65 புள்ளிகள் குறைந்து 11557.10 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் நிப்டி குறியீடு 11604.60 புள்ளிகள் என்ற உச்சத்தையும், குறைவாக 11532 புள்ளிகளை தொட்டது.
இன்றைய வர்த்தகத்தில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளின் விலை நல்ல முன்னேற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் இதன் பங்குகள் 4.05%, ரூபாய் 8.70 உயர்ந்து ரூபாய் 223.50ல் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட மற்ற பங்குகள் – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (₹ 174.60 / + ₹2.70 / +1.57%), க்ராஸிம் (₹ 1061 / +₹15.45 / +1.48%), ஆக்சிஸ் வங்கி (₹ 638.50 / +₹6.75 / +1.07%), ஜீ பொழுதுபோக்கு நிறுவனம் (₹ 510.90 / +₹5.30 / +1.05%), பஜாஜ் நிதி நிறுவனம் (₹ 2920.50 / +₹26.65 / +0.92%).
எஸ் வங்கியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் இறக்கம் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ரூபாய் 14.55 அல்லது 3.74% இறங்கி ரூபாய் 374.05ல் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்த மற்ற பங்குகள் – டைடன் நிறுவனம் (₹ 885.40 / -₹26.50 / -2.91%), அடானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவனம் (₹ 376.80 / -₹7.70 / -2.00%), ஹீரோ மோட்டார் நிறுவனம் (₹ 3220 / -₹64.75 / -1.97%), ஐ சி ஐ சி ஐ வங்கி (₹ 329.85 / -₹5.85 / -1.74%), சன் மருந்து தொழில் நிறுவனம் (₹ 629.70 / -₹9.95 / -1.56%).