வளமான நிதி நிலை பெறுவதற்கு முதலீட்டாளர்கள் ஒரு முறையான சேமிப்பு மற்றும் முதலீட்டு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். முறையான முதலீட்டு திட்டம் (SIP) முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம். இன்றைய இணையதள உலகில் இந்த முறையை தெரிந்து கொள்ளவும், செயல்படுத்தவும் உதவி செய்ய நிறைய தகவல்கள் உள்ளன.
முறையான முதலீட்டு திட்டம் என்பது பரஸ்பர நிதி திட்டத்தில் அல்லது பங்குகள் வாங்குவதற்கு அல்லது ஏதாவது ஒரு செலவிற்கு பணம் சேர்ப்பதற்கு ஒரு தொகையை முடிந்தபொழுது செலுத்தி வருவது. அது நம் தேவைக்கான நேரம் வரும்பொழுது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஒருவர் முதலீட்டை தன் வாழ்நாளில் எவ்வளவு சீக்கிரமாக துவங்குகிறாரோ, அது அவரது பொருளாதார வளத்தை பெருக்கும். மக்கள் அசையா சொத்துக்கள் வாங்கும் ஆர்வத்தில் கொஞ்சம் நிதி சொத்துக்கள் வாங்க செலுத்தினால் அதிலிருந்து கிடைக்கும் ஆதாயங்கள் மிகவும் அதிகம்.
முறையான முதலீட்டு திட்டங்களினால் என்ன ஆதாயம்?
- மிகவும் குறைவான முதலீட்டு தொகை போதும்
- சந்தையில் நேரம் பார்த்து வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை
- நிதி முதலீட்டில் ஒழுக்க முறையை உருவாக்குகிறது
- ரூபாய் மதிப்பீட்டு சராசரி மற்றும் வட்டி கூட்டு தொகையாக்கத்தின் நன்மைகள் கிடைக்கும்
- முதலீட்டு தொகையை வாரம், மாதம், காலாண்டு மற்றும் பல இடைவெளிகளில் செய்யலாம்
குறைவான முதலீடு போதும்
முறையான முதலீட்டு திட்டத்தில் வழக்கமாக முதலீடு செய்வதால் குறைந்த முதலீடே போதுமானது. ஒருவர் ரூபாய் 500ல் பரஸ்பர நிதி திட்டத்தில் அலகுகள் அல்லது பங்குச்சந்தையில் பங்குகள் வாங்கலாம். வழக்கமாக இதை செய்வதால் சில வருடங்களில் முதலீடு பெருகிடும்.
முதலீட்டிற்கான தொகையின் மதிப்பை சராசரி மதிப்பில் குறைக்கிறது
முறையான முதலீட்டு திட்டத்தில் நீண்ட நாட்களிற்கு முதலீடு செய்வதால் – சந்தை உயர்ந்து இருக்கும்பொழுது குறைந்த அலகுகள் அல்லது பங்குகளும், குறைந்து உள்ளபொழுது நிறைய அலகுகள் அல்லது பங்குகள் கிடைக்கும்.
சந்தை உயர்ந்து இருக்கும் பொழுது
ஒரு அலகு / பங்கின் விலை 25 என்றால், ரூபாய் 500ல் 20 அலகுகள் / பங்குகள் வாங்கலாம்
சந்தை இறங்கி இருக்கும் பொழுது
ஒரு அலகு / பங்கின் விலை 10 என்றால், ரூபாய் 500ல் 50 அலகுகள் / பங்குகள் வாங்கலாம்
இந்த இரண்டு முறையையும் சேர்த்து சராசரி மதிப்பிடுகையில் ஒரு அலகு அல்லது பங்கின் விலை ரூபாய் 13.33 ஆக குறைகிறது.
நிதி முதலீட்டில் ஒழுக்க முறையை உருவாக்குகிறது
ஒருவர் வழக்கமாக முதலீடு செய்வதால் அது ஒழுக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மாதத்தில் 5000 சேமிக்க நினைத்தால் அதை வங்கியில் விட்டுவிட்டு மீதமுள்ள தொகையை செலவிற்கு எடுத்துக்கொள்ளலாம். பரஸ்பர நிதி திட்டத்தில் அலகுகள் அல்லது பங்குச்சந்தையில் பங்குகள் வங்கியில் இருந்து நேரடியாக வாங்கலாம். இப்படிச் செய்வதால் சேமிப்பு முதன்மை காரியமாக ஆகி விடுகிறது.
வட்டி கூட்டு தொகையாக்கத்தின் நன்மைகள்
ரூபாய் 10,000 முதலீடு 10% வட்டியில் முதல் ஆண்டின் முடிவில் ரூபாய் 1000 கொடுக்கும். இது இரண்டாவது ஆண்டில் ரூபாய் 1000 + ரூபாய் 1000த்தில் 10%, அதாவது ரூபாய் 1100 லாபம் கொடுக்கும். மூன்றாம் ஆண்டில் கிடைக்கும் தொகை ரூபாய் 1000 + ரூபாய் 1100ல் 10% = ரூபாய் 1110. இதனால், யார் ஒருவர் முதலீட்டை தன் வாழ்நாளில் எவ்வளவு சீக்கிரமாக துவங்குகிறாரோ அவ்வளவு அதிகமாக பணம் வளரும்.
சீக்கிரமாக அளவோடு முதலீடு செய்து வளமோடு வாழ்வோம்!!