டி வி எஸ் குழுமத்தின் சுந்தரம் நிதி நிறுவனம் ஜூன் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 767.03 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 620.27 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பின் நிகர லாபம் உயர்ந்து ரூபாய் 140.72 கோடி ஆனது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 111.74 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 அன்று நிறுவனத்தின் மேலாண்மை கீழ் உள்ள சொத்துக்கள் 21% அதிகரித்து ரூபாய் 25740 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் கடன் பட்டுவாடா 19% அதிகரித்து ரூபாய் 4062 கோடியாக இருந்தது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 3420 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூ. 12.67 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 10.06 ஆக இருந்தது.