பங்குச்சந்தை இன்று புது உச்சத்தை தொட்டது – ஆகஸ்ட் 23, 2018

பங்குச்சந்தை இன்று காலை துவங்கும்பொழுதே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 38416.65 புள்ளிகள் என்ற புது உச்சத்தில் துவங்கியது. இது மேலும் உயர்ந்து 38487.63 என்ற புது உச்சத்தை தொட்டது. ஆனால், முதலீட்டாளர்கள் லாபம் பதிவு செய்ததால் கீழே இறங்கியது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 51.01 புள்ளிகள் உயர்ந்து 38336.76 புள்ளிகளில் முடிந்தது.

தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 11.85 புள்ளிகள் உயர்ந்து 11582.75 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் நிப்டி குறியீடு 11620.70 புள்ளிகள் என்ற புது உச்சத்தை தொட்டது.

உச்சத்தில் பங்குகள் நிறைய விற்கப்படுவதால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே இறங்குகிறது. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.

Indian Stock Market Commentary BSE NSEஇன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா குழுமத்தின் மென்பொருள் நிறுவனம் டெக் மஹிந்திரா பங்குகளின் விலை நல்ல முன்னேற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் இதன் பங்குகள் 2.75%, ரூபாய் 19.50 உயர்ந்து ரூபாய் 728.90ல் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட மற்ற பங்குகள் – டாக்டர் ரெட்டிஸ் லெபோரடரிஸ் (₹ 2467.60 / + ₹56.95 / +2.36%), தேசிய நிலக்கரி மின் நிறுவனம் (₹ 164.50 / +₹3.65 / +2.27%), ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் (₹ 1026 / +₹21.40 / +2.13%), லார்சென் அண்ட் டூப்ரோ (₹ 1349.95 / +₹27.40 / +2.07%), கெயில் (₹ 385.10 / +₹7.00 / +1.85%).

டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் இறக்கம் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ரூபாய் 12.25  அல்லது 4.56% இறங்கி ரூபாய் 256.55ல் முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்த மற்ற பங்குகள் – பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (₹ 358.50 / -₹10.25 / -2.78%), இந்திய எண்ணெய் நிறுவனம் (₹ 153.65 / -₹4.05 / -2.57%), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (₹ 260.10 / -₹6.75 / -2.53%), ஹின்டால்க்கோ (₹ 221.15 / -₹5.25 / -2.32%), க்ராஸிம் (₹ 1042.00 / -₹23.40 / -2.20%).

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *