இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தியில் பெயர் பெற்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், டிவிஎஸ் ரேடியன் என்ற ஒரு புதிய 110cc பயணியர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. உறுதியான உலோக கட்டமைப்பு, நவீன ஸ்டைல் மற்றும் மேம்பட்ட சவுகரியம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற டிவிஎஸ் ரேடியன் நம்பிக்கை நிறைந்த, மன உறுதி வாய்ந்த இந்திய ஆண்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வலுவான பயணியர் மோட்டார்சைக்கிள் பிரிவு வெவ்வேறான தனித்துவமிக்க வாடிக்கையாளர் தேவைகளை நிறைவேற்றுவதுடன் அவர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.
அறிமுக நிகழ்ச்சியில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின், இணை மேலாண்மை இயக்குநர், திரு. சுதர்சன் வேணு கூறுகையில், ‘தரம் மற்றும் நம்பகத்தன்மை மீது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக இருந்துவரும் அசைக்க முடியாத முனைப்பு, சந்தைக்கு சமகாலத்திய மற்றும் கவனத்தை ஈர்க்கக்கூடிய புராடக்ட்களை சந்தைக்கு கிடைக்கச் செய்துள்ளது. இந்த வகைப்பிரிவில் முதன்மை வகிக்கும் சிறப்பம்சங்களைக் கொண்டு, டிவிஎஸ் ரேடியன் தரத்தில் சிறந்த நீடிப்புத்தன்மை செயல்திறன் மற்றும் ஈர்க்கக்கூடிய ஸ்டைலிங் கொடுப்பதற்கு எங்களுடைய மதிப்புகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. நாடு முழுவதும் உள்ள அறிவார்ந்த முற்போக்கு வாடிக்கையாளர்கள், இதன் உறுதியான கருத்தை போற்றி, உடனடியாகவே வரவேற்பார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார்.
அறிமுக நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைவர் ரூ தலைமை செயல் அதிகாரி திரு. K N இராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில், “நாங்கள் அறிவார்ந்த முற்போக்கு சிந்தனையுடைய வாடிக்கையாளர்களை இலக்கு கொண்டு டிவிஎஸ் ரேடியனை இன்று இங்கே அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ரேடியானில் நடைமுறைத்தன்மையை விட்டுக்கொடுக்காமல் வலிமை, சவுகர்ய வசதி மற்றும் ஸ்டைலை வழங்கக்கூடிய தரத்தில் முதன்மையான பல சிறப்பம்சங்கள் மற்றும் பயன் தரக்கூடிய வடிவமைப்பு உள்ளது. வலிமையான, சவுகர்யமிக்க மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய மோட்டார்சைக்கிளை எதிர்பார்க்கக்கூடிய நுகர்வோர்கள் விரும்பக்கூடியதாக டிவிஎஸ் ரேடியன் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.
கட்டமைப்பு
டிவிஎஸ் ரேடியன், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வலிமையான மற்றும் நம்பகமிக்க அனுபவத்தை அதன் திடமான கட்டமைப்பு மற்றும் வலிமையான ஸ்டீல் டியூபுலர் சேசிஸுடன் முழுமையாக வழங்கியிருக்கிறது. அதன் குறிப்பிட்ட வடிவமைப்பு, மோட்டார்சைக்கிளின் நீடித்த வாழ்நாளுக்கு உறுதியளிக்கிறது.
பாதுகாப்பு
இந்த மோட்டார்சைக்கிளில் இவ்வகைப்பிரிவில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள1 ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம், சிறப்பான பிரேக் பிடிக்கும் கட்டுப்பாட்டுத்திறனை வழங்குகிறது சறுக்கக்கூடிய வாய்ப்பை இது மிகவும் குறைப்பதினால் ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. பக்க-ஸ்டாண்ட் இன்டிகேட்டரில் விபத்துகளை தவிர்ப்பதற்கு எச்சரிக்கை ஒலியெழுப்பும் ஒரு பீப்பர் 2 பொருத்தப்பட்டுள்ளது. பிடிப்புத்திறனுடைய டியூூரா கிரிப் டயர்களுடன் கூடிய 18 அளவுடைய பெரிய சக்கரங்கள் பைக் ஓட்டுபவருக்கு சிறந்த பிடிமானத்தையும் மற்றும் சவுகர்யத்தையும் கொடுக்கிறது.
சவுகர்ய வசதி
டிவிஎஸ் ரேடியனில், நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு அளவீடுகளிலும் இந்தப் பிரிவிலேயே மிகப்பெரிய இருக்கை உள்ளது. 5 ஸ்டெப் சரி செய்யத்தக்க பின் ஹைட்ராலிக் அதிர்வுதாங்கியுடன் கூடிய டெலஸ்கோப்பிக் ஆயில் ஊறிய முன் அதிர்வு தாங்கி சவுகர்ய வசதி மற்றும் நீடிப்புத்தன்மையை வழங்குகிறது. ஒரு நிலையான ஓட்டத்தை கொடுக்கக்கூடிய இந்த மோட்டார்சைக்கிளில் சாலைத்தரையிலிருந்து 180 மி.மீ கொண்ட அதிக இடைவெளியுடன் 1265மிமீ நீளம் கொண்ட வீல்பேஸ் உள்ளது. தாழ்ந்த இருக்கை உயரம், செல்ஃப் ஸ்டார்ட் வசதி மற்றும் ஒரு யுஎஸ்பி சார்ஜிங் ஸ்பாட்3 மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் பிடித்துக்கொள்வதற்கு வசதியான கம்பி போன்ற கச்சிதமான செயல்பாட்டு அம்சங்கள் ஈடு இணையற்ற ஓட்டும் அனுபவத்தை கொடுக்கிறது.
ஸ்டைல்
ஸ்டைலிஷ் குரோம் ஏற்றங்களுடன் நிலையான, கிடைவாட்டமான, வடிவமைப்பு இந்த மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றுள்ளது. சக்திவாய்ந்த முகப்புவிளக்கு பகல் நேரத்தில் எரியக்கூடிய விளக்குகளுடன் (னுசுடு) ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டைலிஷ் பெட்ரோல் டேங்குடன் கூடிய தனித்துவமிக்க தோற்றம், குரோம் நிறைவூட்டம்பெற்ற ஸ்பீடோமீட்டர், அதிர்வுதாங்கி மற்றும் சைலன்சர் ஆகியவை டிவிஎஸ் ரேடியன்-ல் குறிப்பிடத்தக்க ஸ்டைல் அம்சங்களாகும்.
செயல்திறன்
டிவிஎஸ் ரேடியனில், ஒரு அதிகபட்ச ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை ஒருங்கே வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட நீடித்த உழைக்கக்கூடிய 109.7 cc டியூரா – லைஃப் எஞ்ஜின் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள், 5000 rpmல் 8.7 Nm என்ற ஒரு முறுக்குவிசையுடன், 7000 rpm 8.4 PS ஆற்றல்திறனை உருவாக்குகிறது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்-ஐ கொண்டிருக்கும் டிவிஎஸ் ரேடியன் 69.3 kmpl என்ற சிறப்பான மைலேஜை வழங்கக்கூடியவாறு எரிபொருள் சிக்கனத்திறன் கொண்ட பைக் ஆகும்.
5 வருட வாரண்டியுடன் வெள்ளை, மஞ்சள் கலந்த பழுப்பு நிறம், கருஞ்சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய வண்ணங்களில் டிவிஎஸ் ரேடியன் கிடைக்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்
• நிரூபிக்கப்பட்ட டியூரா – ஆயுள் கொண்ட என்ஜின் • வலிமையான ஸ்டீல் டியூபுலர் அடிப்பீடம் (சேசிஸ்) • டியூப் இல்லாத டயர்களுடன் 18 அங்குல சக்கரங்கள் • ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த DRL உடன் சக்திவாய்ந்த முகப்புவிளக்கு • இந்தப்பிரிவில் அதிக அமரும் இடமுள்ள இருக்கை வசதி • அதிக தரை இடைவெளி • பெட்ரோல் தொட்டியின் மீது தொடைப்பட்டைகள் • பீப்பருடன் சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர்2 • டியூரா பிடிமானம் கொண்ட டயர்கள் • 3D (முப்பரிமாணம் கொண்ட) லோகோ • MF மின்கலம் (பேட்டரி) |
1 110cc ரூ அதற்கு கீழ்ப்பட்ட பிரிவு
2 அக்சசரி
3 வேர்ல்டு மோட்டார்சைக்கிள் டெஸ்ட் சைக்கிளின் கீழ் (WMTC)