கென்னமெட்டல் இந்தியா நிறுவனம் ஜூன் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 230 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 186.12 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பின் நிகர லாபமாக ரூபாய் 19.71 கோடி ஈட்டியுள்ளது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 2.15 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூ. 8.97 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 0.98 ஆக இருந்தது.
முழு ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகள்
ஜூன் 30, 2018 முடிவடைந்த முழு ஆண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 801.48 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 முடிவடைந்த முழு ஆண்டில் ரூபாய் 701.83 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 முடிவடைந்த முழு ஆண்டில் வரிக்கு பின் நிகர லாபமாக ரூபாய் 52.26 கோடி ஈட்டியுள்ளது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த முழு ஆண்டில் ரூபாய் 24.37 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 முடிவடைந்த முழு ஆண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூ. 23.78 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த முழு ஆண்டில் ரூபாய் 11.09 ஆக இருந்தது.