ஜில்லெட் இந்தியா நிறுவனம் ஜூன் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 418.33 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 442.49 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பின் நிகர லாபமாக ரூபாய் 34.62 கோடி ஈட்டியுள்ளது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 37.67 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூ. 10.62 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 11.56 ஆக இருந்தது.
முழு ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகள்
ஜூன் 30, 2018 முடிவடைந்த முழு ஆண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 1689.60 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 முடிவடைந்த முழு ஆண்டில் ரூபாய் 1826.06 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 முடிவடைந்த முழு ஆண்டில் வரிக்கு பின் நிகர லாபமாக ரூபாய் 115.55 கோடி ஈட்டியுள்ளது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த முழு ஆண்டில் ரூபாய் 121.24 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 முடிவடைந்த முழு ஆண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூ. 70.29 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த முழு ஆண்டில் ரூபாய் 77.67 ஆக இருந்தது.