அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் 61 வயது பெண்மணிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் முதல் உலகின் மிகப்பெரிய செயற்கை நுரையீரல் வால்வை வெற்றிகரமாக பொருத்தி சாதனை!

ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான மல்டி-ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவமனைகளின் தொடர் செயல்பாட்டு அமைப்பைக் கொண்டிருக்கும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், சென்னையில் முதல் உலகின் மிகப்பெரிய நுரையீரல் வால்வை (32 மி.மீ) [first World’s Largest Pulmonary Valve (32mm)] அறுவை சிகிச்சை இல்லாமல், 61 வயதான நோயாளிக்கு 15 செப்டம்பர் 2020 அன்று வெற்றிகரமாக பொருத்தி சாதனைப் படைத்து இருக்கிறது.

திருமதி சக்தி  (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 61, இவருக்கு 1981-ம் ஆண்டில் டெட்ராலஜி ஆஃப் ஃபாலோட் [Tetralogy of Fallot.] என்ற மிக அரிதான நிலைக்கு, மொத்த அறுவை சிகிச்சை திருத்தம் [total surgical correction] மேற்கொள்ளப்பட்டது. இது பிறக்கும் போதே (பிறவியிலேயே – (congenital)) இருக்கும் நான்கு விதமான இதய குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் ஒரு அரிதான நிலை ஆகும். இந்த குறைபாடுகள், இதயத்தின் கட்டமைப்பை பாதிப்பதோடு இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை குறைக்க செய்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் ஓடக் காரணமாக அ மைகின்றன. நுரையீரல் வால்வு (நுரையீரலுக்கான வால்வு) படிப்படியாக கசிய ஆரம்பிப்பதற்கு முன்பு வரை அவர் நன்றாக இருந்தார்.

திருமதி சக்தி  (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னையின் அப்பல்லோ மருத்துவமனைகள் கிரீம்ஸ் சாலையில் 2019-ம் ஆண்டு மே மாதம் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு ஆகியவற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டார். முழுமையான நோய் கண்டறியும் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் கடுமையான வால்வு கசிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கசிவு அவரது ரத்தத்தை செலுத்தும் இதயத்தின் வலது பக்க அறைக்கு பரவியதாகவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக ஆரம்பித்ததாகவும் பரிசோதனை தகவல்கள் தெரிவித்தன.

நுரையீரல் தமனி, நுரையீரலுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளம் குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவடைந்திருந்தது. இதற்கு முறைப்படி சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதய செயல்பாட்டு மோசமடையும் வகையில் தீவிரமான பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும். இதனால், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் கன்சல்டண்ட் ஸ்ட்ரக்ச்சுரல் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சி.எஸ். முத்துக்குமரன் , [Dr. CS Muthukumaran, Consultant Structural Interventional Cardiologist, Apollo Hospitals] தலைமையிலான மருத்துவர்கள் குழு, ஜூன் 2019-ல் மிக அதிக ஆபத்துள்ள அறுவை சிகிச்சையான, பெர்குடனியஸ் வால்வு பொருத்தும் அறுவை சிகிச்சையைச் [percutaneous valve implantation] செய்ய முடிவு செய்தது.

அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய பலூன் விரிவடையக் கூடிய மிகப்பெரிய செயற்கை வால்வின் அளவு 29 மி.மீ. மட்டுமே இருந்தது. இந்த அளவிலான வால்வு, உடனடி பொருத்துதலுக்கு பொருத்தமானது அல்ல என்ற நடைமுறை சிக்கலும் இருந்தது.

சீனா போன்ற சந்தைகளில் இருந்து சிகிச்சைக்குப் பொருத்தமான வால்வை [தாமாகவே விரிவடையும் தன்மை கொண்ட வால்வு] இறக்குமதி செய்வது ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகையே உலுக்கிய கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக அந்த வாய்ப்பும் கடினமானதாகிவிட்டது. இந்த இக்கட்டான நிலைமை மருத்துவக் குழுவை மருத்துவ நடைமுறைகளுக்காக காத்திருப்பதைத் தவிர வேறு வாய்ப்பில்லை என்ற சூழலுக்கு தள்ளியது. ஆனால் இந்த நீண்டகால காத்திருப்பின் காரணமாக நோயாளியின் நிலை மேலும் மோசமடைந்தது, இதன் தொடர்ச்சியாக அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவின் மெரில் லைஃப் சயின்ஸ்சஸ் நிறுவனத்தினால் [Meril Life Sciences, India] அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் 32 மிமீ வால்வு, நோயாளியின் நிலைக்கு மிகப் பொருத்தமான தேர்வாக கருதப்பட்டது. இதனால், 32 மிமீ செயற்கை வால்வு மருத்துவ நடைமுறைக்கு பயன்படுத்தப்பட்டது.

ஊடகங்களுக்கு இந்த மருத்துவ நடைமுறை குறித்து உரையாற்றிய டாக்டர் சி.எஸ்.முத்துக்குமரன், “டெட்ராலஜி ஆஃப் ஃபாலட் பிறவியிலேயே உண்டாகும் இதயக் குறைபாடு. மேலும் பிறந்த 6 மாதத்திலேயே திறந்த இதய அறுவை சிகிச்சை அவசியம் தேவைப்படும் ஒரு பிரச்சினை ஆகும். ஆனால் இந்த நோயாளிகளுக்கு குறைப்பாடுகளுள்ள நுரையீரல் வால்வு [நுரையீரல் குழாய்] இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் வால்வை மாற்றுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேலும் தேவைப்படும். ரெடோ திறந்த இதய அறுவை சிகிச்சையை மீண்டும் செய்வது என்பது மிகவும் அதிக ஆபத்தானது. அறுவை சிகிச்சை பயம் காரணமாக இந்த நோயாளிகள் உரிய நேரத்தில் வராமல் மிக தாமதமாக எங்களிடம் வருகிறார்கள். இந்த சமீபத்திய நவீன தொழில்நுட்பம், இந்த நபர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இல்லாமல் அவர்களது வால்வை மாற்றுவதற்கு உதவும். இந்த புதிய 32 மிமீ வால்வு இதுபோன்ற இதய குறைபாடுகள் மற்றும் பிற அசாதாரண பிரச்னைகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைமுறைகளை வடிவமைக்கும் வாய்ப்புகளை வெகுவாக அதிகரித்துள்ளது’’ என்றார்.

டாக்டர் செங்கொட்டுவேலு, சீனியர் கன்சல்டண்ட் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் [Dr. Sengottuvelu, Senior Consultant Interventional Cardiologist], டாக்டர் நெவில் சாலமன், சீனியர் கன்சல்டண்ட், கார்டியாக் சர்ஜன் [Dr. Neville Solomon, Senior Consultant, Cardiac Surgeon], டாக்டர் வசந்தரூபன், மயக்க மருந்து நிபுணர் [Dr Vasantharoopan, Anesthetists], டாக்டர் வினோத்
கார்டியாலஜிஸ்ட் இண்டென்ஸிவிஸ்ட் & ரேடியாலஜிஸ்ட் [Dr Vinodh cardiologist, Intensivists and Radiologists] ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு ஒன்று சேர்ந்து இதற்கான மருத்துவ நடைமுறைகளைத் திட்டமிட்டது.

இந்த மருத்துவர்களின் குழு வால்வை வலது தொடை நரம்பு வழியாக பொருத்தியது, [நோயாளியின் இடுப்பிலிருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் குழாய்]. இந்த முழு மருத்துவ நடைமுறை 2 மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. செயல்முறைக்குப் பிறகு நோயாளி மிக விரைவாக குணமடைந்து, மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *