கோவிட் – 19 தொற்றில் இருந்து மீண்ட, ஆனால் தொடர்ச்சியான விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு திறம்பட்ட முறையில் சிகிச்சை வழங்க இந்த சிறப்புக் கிளினிக்குகள் உதவும்
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் தனது மருத்துவமனை வலையமைப்பு முழுவதும் கோவிட் தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சைக்கான கிளினிக்குகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது. கோவிட் தொற்றுக்குப் பிந்தைய இந்த கிளினிக்குகள் கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த ஆனால் நோய்த்தொற்றால் ஏற்படும் நடுத்தர மற்றும் நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களது சிக்கல்களை இந்த சிகிச்சை மையங்கள் தீர்க்கும். கோவிட்-19 நோயாளிகளில் 50 சதவீத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பின் சில மாதங்களுக்குப் பிறகு மூச்சுத் திணறல், நெஞ்சு வலி மற்றும் இதய பிரச்சினைகள், மூட்டு வலி, பார்வை பிரச்சினைகள் மற்றும் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர். கோவிட்-19 தொற்றில் இருந்து மீண்ட பிறகு நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும், அவர்களை ஆரோக்கியமாக மீட்டெடுக்கவும் உதவும் வகையில், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு நிபுணர்கள் உள்ளிட்ட நிபுணர்களின் குழுவால் இந்த கோவிட்-டுக்கு பிந்தைய கிளினிக்குகள் நிர்வகிக்கப்படுகின்றன. சென்னையில், கிரீம்ஸ் ரோடு, அப்போலோ மருத்துவமனையில் கோவிட்-க்கு பிந்தைய சிறப்பு சிகிச்சை, மீட்பு மருத்துவமனை செயல்படும்.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறுகையில், “கோவிட் சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு விரிவான சிகிச்சை திட்டம் தேவைப்படும் என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்து, மார்ச் மாதத்திலே கவாச் என்ற திட்டத்தைத் தொடங்கினோம், இது நோயாளியிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆய்வு செய்தல், மதிப்பீடு, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வரை அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைப்பதாக அமைந்தது.
வைரஸ் தொற்றிலிருந்து மீண்டாலும் அது நீடித்த விளைவுகளைக் கொண்டிருப்பதாக அமைந்துள்ளது. எனவே மீண்ட நோயாளிகள் முழுவதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவ, மீட்புக்குப் பிந்தைய கவனிப்பின் அம்சங்கள் அவசியமானது. எனவே இதற்கான கிளினிக்குகளை பல்வேறு நகரங்களில் உள்ள எங்களது மருத்துவமனைகளில் தொடங்குகிறோம். கோவிட் -19-லிருந்து மீண்ட ஆனால் தொடர்ந்து விளைவுகள் மற்றும் அறிகுறிகளைக் கொண்ட
நோயாளிகளுக்கு இந்த கோவிட்-டுக்குப் பிந்தைய மீட்பு கிளினிக்குகள் ஒரே தளத்தில் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கும் சிறந்த இடமாகத் திகழும். நோயாளி வெவ்வேறு நிபுணர்களிடம் செல்லாமல் ஒருங்கிணைந்த கவனிப்பைப் பெறவும் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும் இந்த கிளினிக்குகள் உதவும். மேலும் ஒரு நோயாளி மேற்கொள்ளக்கூடிய பல்வேறு பரிசோதனைகளைத் தவிர்க்கவும் இது உதவும்.” என்றார்.
அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த தொற்று நோய் சிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியன் கூறுகையில், “கோவிட் -19-லிருந்து மீண்ட பல நோயாளிகள், தொடர் சிக்கல்கள் ஏற்படுதவால் எங்களைத் தொடர்பு கொள்கின்றனர். இதற்கு எங்கு செல்ல வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கோவிட் -19-லிருந்து மீண்ட நோயாளிகள் எதிர்கொள்ளும் இந்த சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண, கோவிட்-டுக்கு பிந்தைய மீட்புக்கான சிகிச்சை அளிக்கும் மையங்களைத் (கிளினிக்குகள்) தொடங்கியுள்ளோம். கோவிட்-டுக்குப் பிந்தைய பராமரிப்புக்கான இந்த பிரத்யேக கிளினிக்குகள் நோயாளிகளுக்குத் தேவையான சிறப்பு கவனிப்புகளை வழங்க உதவும். நாங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதுடன், நோயாளிகள் சரியான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்ய வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். நோயாளிகள் கோவிட்-19 இன் விளைவுகளிலிருந்து முழுமையாக மீண்டு, கோவிட்டுக்கு முந்தைய நிலையைப் போலவே இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக அவர்கள் திரும்ப இந்த கிளினிக்குகள் உதவும்.” என்றார்.
கோவிட்-19 உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளையும் பாதிக்கிறது. பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான நிகழ்வுகளைத் தவிர, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைமைகள் கோவிட்-க்குப் பிந்தைய நோய்க்குறியின் ஒரு பகுதியாகும். கோவிட் தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளில் சிலர் திடீரென உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான உயிரிழப்புகள் கடுமையான இதயக் கோளாறால் ஏற்பட்டுள்ளன.
அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரராஜன் கூறுகையில், ” கோவிட் -19 நுரையீரலை மட்டுமல்லாமல், உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதித்து நீடித்த சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. கோவிட்-19 தொற்றின் கடுமையான கட்டத்திற்கான சிகிச்சை முடிந்ததும், நோயாளி குணமடைந்து வீடு திரும்புகிறார். தொற்றில் இருந்து மீண்ட பிறகு நல்வாழ்வை பாதிக்கும் சில நிகழ்வுகள், சில வாரங்கள் மற்றும் சில மாதங்களுக்குப் பிறகு சிலருக்கு ஏற்படுகின்றன. கோவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பலர் நீண்டகால நோய்களை உடையவர்கள். ஆனாலும் லேசான அறிகுறிகள் இருந்து தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகள் சிலர் கூட வைரஸின் நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சில நீண்டகால விளைவுகள் கடுமையானதாகவும் வாழ்வை முடக்குவதாகவும் இருக்கக்கூடும். இந்த கோவிட்-19-க்குப் பிந்தைய சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகள், நோயாளிகளின் அறிகுறிகளை தொடர்ச்சியான அடிப்படையில் கண்காணிக்கவும் சரியான நேரத்தில் அவர்களுக்கு உரிய மருத்துவ கவனிப்பை வழங்கவும் உதவும்.” என்றார்.
அப்பல்லோ மருத்துவமனைகளின் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரேஷ் கூறுகையில், “கோவிட்-19 பாதிப்புக்கு முன்னர், நாங்கள் ஏற்கனவே தொற்றா நோய்களின் (NCD) அதிகரித்த பாதிப்புகளை எதிர்கொண்டோம். அவை 70 சதவீதத்துக்கும் அதிகமான மரணங்களுக்கு காரணமாக இருந்தன. தற்போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கோவிட்-19-க்குப் பிறகு இந்த நோய்த் தாக்கங்களின் விளைவுகள் அதிகரிக்கும். மேலும் கூடுதல் சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால், தொற்றுநோயைத் தாண்டி நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு அதிகரிக்கும் நிலை ஏற்படக் கூடும். ஏற்கெனவே நீண்ட கால நோய்கள் இருந்தவர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தால் அவ்வாறு மற்ற நோய்வாய்ப்பட்ட நபர்கள் அதிக தொடர் பாதிப்புகளைத் சந்திக்கக் கூடும். இந்த சிறப்பு கிளினிக்குகள் கோவிட்டு-க்கு பிந்தைய நோய்த் தன்மையின் கடுமையான விளைவுகள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும். நோயாளியை மையமாகக் கொண்ட, விரிவான, தொலைத் தொடர்பு ஆலோசனை மற்றும் கிளினிக்கில் நேரடி அடிப்படையிலான சிகிச்சைத் திட்டத்தின் மூலம் கோவிட்-க்கு பிந்தைய நோய்த் தாக்கத்தின் ஒரு பகுதியாக உருவாகும் நாட்பட்ட பாதிப்புகளை திறம்படத் தவிர்க்க இந்த சிறப்பு கிளினிக்குள் உதவும்.” என்றார்.
முதல் கட்டமாக, சென்னை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு, மைசூர், கொல்கத்தா, புவனேஸ்வர், குவஹாத்தி, டெல்லி, இந்தூர், லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கோவிட் தொற்று பாதிப்புக்கு சிகிச்சையளிக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளில் இந்த கோவிட் சிகிச்சைக்குப் பிந்தைய தொடர் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும். இந்தக் கிளினிக்குகள் ஒரு செவிலியரின் உதவியுடன் ஒரு குடும்ப நல மருத்துவரைக் கொண்ட ஒரு பிரத்யேக குழுவால் நிர்வகிக்கப்படும்.
முன்பதிவுகளுக்க https://www.apollohospitals.com/ இணைய தளத்தைப் பார்வையிடவும் அல்லது 044-28293333 என்ற எண்ணை அழைக்கவும்.