பங்குச்சந்தையில் இன்று காலை துவங்கும்பொழுதே புது உச்சத்தில் துவங்கியது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 38402.96 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனால், முதலீட்டாளர்கள் லாபம் பதிவு செய்ததால் கீழே இறங்கியது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 7 புள்ளிகள் உயர்ந்து 38285.75 புள்ளிகளில் முடிந்தது.
தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 19.15 புள்ளிகள் உயர்ந்து 11570.90 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் நிப்டி குறியீடு 11581.75 என்ற புது உச்சத்தை தொட்டது.
இன்றைய வர்த்தகத்தில் யு பி எல் நிறுவனத்தின் பங்குகளின் விலை நல்ல முன்னேற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் 5.01%, ரூபாய் 31 ஏறி ரூபாய் 649.90ல் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட மற்ற பங்குகள் – டெக் மஹிந்திரா (₹708.50 – ₹ 20.55 / +2.99%), நிலக்கரி இந்தியா நிறுவனம் (₹ 291.20 – ₹ 7.15 / +2.52%), லூபின் (₹ 889.15 – ₹ 19.90 / +2.29%), க்ராஸிம் (₹ 1063.45 -₹23.60 / +2.27%), ஆக்ஸிஸ் வங்கி (₹ 636.50 -₹12.10 / +3%).
எஃகு உற்பத்தி நிறுவனம் டாடா ஸ்டீலின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் இறக்கம் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ரூபாய் 15.40 அல்லது 2.95% இறங்கி ரூபாய் 584ல் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்த மற்ற பங்குகள் – பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (₹ 369.30 / -₹6.65 / -1.77%), வேதாந்தா (₹ 218.85 / -₹3 / -1.35%), ஹிந்துஸ்தான் யுனிலீவர் (₹ 1753.30 / -₹23.70 / -1.33%), மஹிந்திரா & மஹிந்திரா (₹ 959 / -₹10.55 / -1.09%), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (₹ 267.30 / -₹2.70 / -1%).