ஹெச்.டி.எப்.சி சொத்து மேலாண்மை நிறுவனம் (ஹெச்.டி.எப்.சி அஸ்ஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்) ஜூன் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 501.15 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 417 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பின் நிகர லாபம் ரூபாய் 205.26 கோடி என அறிவித்துள்ளது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 164.57 கோடியாக இருந்தது.
ஜூன் 30, 2018 ல் முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 5 ஒரு பங்குக்கு) ரூ. 9.68 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 8.06 ஆக இருந்தது.
நிறுவனத்தின் மேலாண்மையில் இருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு 22% அதிகரித்து ஜூன் 30, 2018 அன்று ரூபாய் 301100 கோடியாக இருந்தது. இது ஜூன் 30, 2017 அன்று ரூபாய் 247800 கோடியாக இருந்தது.