மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனம் (மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்விசஸ் லிமிடெட்) ஜூன் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 647.80 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 598.96 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பின் நிகர லாபமாக ரூபாய் 103.60 கோடி ஈட்டியுள்ளது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 123.12 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனம் ஜூன் 30, 2018 முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 10 ஒரு பங்குக்கு) ரூ. 7.84 ஆக இருந்தது. இது ஜூன் 30, 2017 முடிவடைந்த காலாண்டில் ரூபாய் 10.04 ஆக இருந்தது.
நிறுவனத்தின் செலவுகள் முதல் காலாண்டில் அதிகரித்ததால் லாபம் குறைந்துள்ளது.