கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளம் மிகுந்த சேதத்தை விளைவித்துள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்து நிதி உதவி மற்றும் இதர உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதைப்போல், மாருதி சுசூகி இந்தியா நிறுவனமும் கேரளா மக்களின் புனர்வாழ்வு மற்றும் நிவாரணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இணைந்து ரூபாய் 3.5 கோடிகள் நிதி உதவி அளித்துள்ளனர்.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தன் பங்காக ரூபாய் 2 கோடி பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளது.
இதை தவிர, நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் பங்களிப்பாக ரூபாய் 1.5 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.