மஹிந்திரா வேளாண் உபகரணங்கள் நிறுவனம் ஏப்ரல் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் 2020ல் மொத்தமாக 4772 வாகனங்களை விற்றுள்ளது, இது ஏப்ரல் 2019ல் 28552ஆக இருந்தது. ஏப்ரல் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 83% குறைந்துள்ளது.
ஏப்ரல் 2020ல் இந்நிறுவனம் 56 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது ஏப்ரல் 2019ல் 1057ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 95% குறைந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 4716 வாகனங்களை ஏப்ரல் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 83% குறைந்தது. ஏப்ரல் 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 27495 ஆக இருந்தது.